RSS

“இது!”

“வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்

 கவிப்பெருக்கும் மேவு மாயின்

 பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்

 விழிபெற்றுப் பதவி கொள்வார்”

என்பார் பாரதி. கலையும் கவியும் எங்கு பெருகுகிறதோ அங்கு கல்வியும், சமத்துவமும், சமூக நலமும், மனித நேயமும், உயிர்களிடத்தில் அன்பும், அழகுணர்ச்சியும் உருவாகும். அதற்கான சிறு முயற்சியே இத்தளம்.

பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் என் அன்பு மாணவ நண்பர்கள் இத்தகைய அக்கறையோடுதான் இவ்வுலகைப் பார்க்கிறார்கள், பகிர்கிறார்கள். இப்போது வகுப்பறைச் சூழலை விட்டுவிட்டு இங்கே நானும் அவர்களும் சந்தித்துக் கொள்கிறோம். நாளைய உலகைப் புடமிடும் சக்தி அவர்களின் சிந்தனைச் சிறகுகளுக்குண்டு என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.

இங்குள்ள படைப்புகள் அனைத்தும் படைப்பாளிகள் தேர்ந்த வடிவமும் அவர்களின்  கருத்துருக்களுமேயாம். அவற்றில் ஏதேனும் ஒன்று ஏதோ ஒரு வகையில் தங்களின் தேடலுக்குப் பயன்படுமாயின், அதுவே அவர்களின்  சிந்தனைப் பரப்பிற்குக் கிடைத்த வெற்றி.

தோழமையுடன்,

அசின் சார், கழுகுமலை.

……………………………………………………………………………………………………………………………………………

கடிதம் – 1

மீண்டும் வணக்கம்.

இப்போது, என்அன்பு வேண்டுதலுக்கு இணங்க என் மதிப்பிற்குரிய ஆசிரியர் வை.பூ.சோ.அவர்களும், என் அன்புத் தந்தை புலவர் அ.மரியதாஸ் அவர்களும் தத்தம் ஆக்கங்களை அளித்து வருகின்றனர். அவர்கள் வாழ்வும் வயதும் சொல்லும் செய்திகள், நமக்குப் புதிதெனக் கருதி ‘சொல் புதிது’ தவறாமல் பதிவேற்கிறது.

அசின் சார், 23.01.2013.

…………………………………………………………………………………………………………………………………………….

 

6 responses to ““இது!”

  1. kavitha

    09/06/2012 at 6:32 முப

    we are reading your articles. Really,very nice. I wish your job and congratulations

     
  2. ramkumar

    17/10/2012 at 7:20 பிப

    I like your articles

     
  3. Saravanan

    17/01/2013 at 2:01 பிப

    Nice to Read , I am Sattanathan’s Friend

     
  4. Ram

    18/06/2013 at 4:44 பிப

    Hi,
    Acutally i like the site but why don’t you have the site in english version transalation.

     

Asin sir -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி