RSS

என் பார்வையில் “இங்கிலிஷ் விங்கிலிஷ்”

16 அக்

எம்.அலெக்ஸ் அம்புரோஸ், சென்னை.“பூ” படத்திற்கு பின்னர்,  ஹீரோயினை சார்ந்து எடுக்கப்பட்ட சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

நாம் மிகச் சாதாரணமாக உதாசீனப்படுத்திவிடும் குடும்பத் தலைவிகளின் உணர்வுகளை, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்தக் கதை. கொஞ்சம் சொதப்பியிருந்தால் கூட, “விக்ரமன் பாணி” சினிமாவாக மாறியிருக்கக் கூடும். அந்த அபாயத்திலிருந்து படத்தை தப்புவிப்பதே திரைக்கதையும், அட்டகாசமான வசனங்களும் தான்.

மிக நுணுக்கமாக ரசிக்க இப்படத்தில் ஏராளமான விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. “ஒருவொருக்கொருவர் புரிதலை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் மொழி மட்டுமேயன்றி, அதையே குறையாக பாவித்து ஒருவரை காயப்படுத்த வேண்டாமே” என்று பாசிடிவ் விஷயங்களை நமக்குள் பதிய வைக்கிறது.

“உனக்கு ஏ.பி.சி-ன்னாலே என்னன்னு தெரியாது” என்று மூளையோடு பேசும் தன் பிள்ளையிடம், “ஆனா பேரண்ட்ஸ்ன்னா என்னன்னு தெரியும், அவங்க கடமை என்னன்னு தெரியும்” என்று மனதிலிருந்து வார்த்தைகளைப் பேசுவதும்,

“எனக்கு என் குழந்தைகளை விட, என்னுடைய இங்கிலீஷ் முக்கியமாப் போச்சே” என்று கலங்குவதும்;

“லட்டு செய்வதற்காகவே பிறந்திருக்கா” என்று கணவன் கலாய்க்கும் போதும்;

பார்வைகளிலேயே உதாசீனங்களை மறைத்து தன்னை இயல்பாக்கிக் கொள்வதும்;

“ஆளாளுக்குத் தூக்கி எறிய நான் என்ன குப்பைத் தொட்டியா? எப்பவும் குறை சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி?” என்று பொருமுவதும்;

“மற்ற சப்ஜெக்டை விட, என்னுடைய பேவரைட் சப்ஜெக்ட்ல நான் பெயில் ஆகாம இருக்குறதுதான் முக்கியம்” என்று விரக்தியின் போது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும்;

டியூஷன் கிளாசில் ஆசிரியரின் செயல்முறைகளைப் பற்றி மற்றவர்கள் குறை சொல்லும்போது, ஷாஷி சொல்லும் பதில்களும்;

“இடத்திற்குத் தகுந்தாற்போல பயன்படுத்துவதற்குத் தான் மொழியே” என்பது போல இந்தியா திரும்பும் இறுதிக் காட்சியில், “ஏதாவது தமிழ் நியூஸ் பேப்பர் இருக்கா” என்று கேட்பதும் என எல்லா ப்ரேம்களிலும் Applause(கைதட்டுதலை) அள்ளுகிறார் “ஷாஷி” கதாபாத்திரமான ஸ்ரீதேவி.

“சர்ப்ரைஸ் அஜித்” உட்பட, மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக இயல்பு. “பெண் என்றாலே ஏமாற்றுக்காரி” என்று கண்மூடித்தனமாக நம்பி, “அடிடா அவளை, கொலை வெறி, வேணாம் மச்சான், …” போன்ற பாடல்களை ரிங்டோனாக வைத்து விஷமத்தை பரப்புபவர்கள், அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு இது.

“குடும்பத்திலிருக்கிற ஒவ்வொருத்தரையும் சின்னதா சந்தோஷப்படுத்த நான் எவ்வளவு கஷ்டப்படுறேன். ஆனா, அவங்க என் மனசை நோகடிச்சுடுராங்களே” என அனுதினமும் புலம்பித் தவிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, இப்படம் ஒரு சமர்ப்பணம்.

 

2 responses to “என் பார்வையில் “இங்கிலிஷ் விங்கிலிஷ்”

  1. kamatchi

    23/10/2012 at 11:43 முப

    நீங்கள் சொல்வது எல்லாம் கரெக்ட். 2நாட்களுக்குமுன் எவ்வளவோ வருடங்களுக்குப் பின் பிள்ளைகள் கட்டாயத்தின் பேரில் இதைப் பார்த்தேன். முதல் பாதியில் ஷாசியின் இடத்தில் என்னை வைத்துப் பார்த்திருப்பார்கள் என்று
    விநாடிக்கு விநாடி நினைப்புடனே படத்தைப் பார்த்தேன். அருமையான படம்.கதை
    தொய்வில்லாமல் பின்னப்பட்டுள்ளது. வசனங்கள் நிகழ்வை தத்ரூபமாக காட்டியது.

     
    • Alex Ambrose

      23/10/2012 at 3:45 பிப

      உங்களது பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி

       

பின்னூட்டமொன்றை இடுக