RSS

வேதபுரம்: தொகுப்பு

20 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

தேடிச்சென்று நம் முன்னோர்களின் அதிசயங்களை பார்ப்பதைப் போலவே, நாம் அன்றாடம் புழங்கும் நகரங்களையும் பார்ப்பதும் அவற்றை ஏதோ ஒரு வகையில் பதிவுகளாக்குவதும் முக்கியமானது.

குறிப்பாக நகரம் என்பது அடிக்கடி தன் முகத்தை மாற்றிக்கொண்டே இருப்பது. நகரத்தில் இன்றிருப்பது நாளை இருப்பதில்லை. எனவே நகரங்களின் காலகட்டத்தை அடிக்கடி பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆனந்த ரங்கரின் நாட்குறிப்புகளே அப்படிப்பட்ட ஒரு பதிவுதான். தான் வாழ்ந்த காலத்தை, தான் புழங்கிய சமூகத்தை, தன் கண்முன் பார்த்த ஊரை, சம்பவங்களை அப்படியே பதிவு செய்தார்.

ஒன்றின் அற்புதத்தை அறிய அது பழமையாகும் வரை ஏன் காத்திருக்கவேண்டும். நம் கண்முன்னே இப்போதே ஏன் கண்டுகொள்ளக்கூடாது?

எனது ஊர் சுற்றல் புதுச்சேரியில் முடிந்ததும் இதுதான் தோன்றியது. பெங்களூர் சென்றதும் பெங்களூரின் தற்கால தோற்றங்களை ஓவியங்களில் பதிந்து வைக்க வேண்டும் என்ற உத்வேகம் மனதில் எழுந்தது, தேர்வு முடிவு வந்ததும் நொந்து போய் அடுத்த தேர்வுக்கு இப்போதே படிப்பதற்கான திட்டங்களை தீவீரமாகத் தொடங்குவோம் இல்லையா? அது போலத்தான் இந்த எண்ணம் என்பது நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும் இந்த உத்வேகத்தை ஓரளவாவது குறைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.

பெங்களூர் செல்வதற்கான ‘கரீப் ரத்'(ஏழையின் ரதம்) ரயில் அன்று முழுவதும் ஸ்டேஷனிலேயேதான் நின்று கொண்டிருந்தது.

உடல் அசதியை உணர்ந்தது. மழைக்கான அறிகுறி வேறு. மோட்டார் சைக்கிளை ஒப்படைத்துவிட்டு, ரயிலேறச் சென்றேன்.

நன்றாக இருட்டியது. மழை தொடங்கியது. நனைந்து கொண்டே ரயிலுக்குள் ஏறி அமர்ந்தேன். ரயில் புறப்பட இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருந்தன, ‘மானுடம் வெல்லும்’ படித்து விட்டுத்தான் புதுச்சேரி வந்தேன். புதுச்சேரியில்தான் ‘வானம் வசப்படும்’ வாங்கினேன். ‘கண்ணீரால் காப்போம்’ எங்குமே கிடைக்கவில்லை.

பையிலிருந்து ‘வானம் வசப்படும்’ நாவலை எடுத்து வாசித்தேன். முதலில் அமர்ந்த நிலையில், பின் லேசாக சாய்ந்து கொண்டு, அதன் பின் படுத்துக் கொண்டு வாசித்தேன். டிக்கெட் பரிசோதனை முடிந்ததும் தலைக்கருகிலேயே புத்தகத்தை வைத்தபடி படுத்திருந்தேன். ஜன்னல் கண்ணாடிகளில் நீர்க் கோடுகள் இறங்கிக்கொண்டிருந்தன. வெளியே நல்ல இருட்டு.

விழித்த போது ‘வானம் வசப்படும்’ தரையில் கிடந்தது. ஜன்னலுக்கு வெளியே மெல்லிய பகல் வெளிச்சம். பெங்களூரை நெருங்க இன்னும் ஒரு மணி நேரமிருந்தது.

இந்த புதுச்சேரி ‘கரீப் ரத்’ ரயில் பற்றி சொல்லியே ஆக வேண்டும். எக்கச்சக்கமான பெட்டிகள் உள்ள இந்த ரயிலில் மிஞ்சிப் போனால் 20 பேர்தான் பயணம் செய்வார்கள் – TTR-ம் guard-ம் உட்பட.
இந்த ரயிலைப் பார்க்கும் போதெல்லாம் கோபமாக வரும். எங்கள் சொந்த ஊருக்கு போவதற்கான ரயில் எப்போதும் கூட்டத்தால் நிரம்பி வழிய, இந்த ரயில் மட்டும் எப்போதும் பத்தோ, இருபதோ பேரை மட்டுமே சுமந்து செல்கிறது.

பெங்களூரை நெருங்கும் முன் இந்த ‘ஏழையின் ரதத்தை’ வரைய ஆரம்பித்தேன். அந்தப் படம்தான் மேலுள்ளது. இதில் உள்ளது போல்தான் அந்த ரயில் எப்போதும் வெறிச்சோடி இருக்கும்.

எந்தக் களேபரமும் இன்றி பெங்களூரிலிருந்து பயணம் செய்ய விரும்பினால் புதுச்சேரிக்கு இந்த ரயிலில் போய்வாருங்கள்.

வேதபுரம் பதிவுகள்:

—————————————————–

வேதபுரத்து வாழ்க்கை

வேதபுரம்: ரங்கப் பிள்ளை வீதி

வேதபுரம்: ஆனந்த ரங்கப் பிள்ளையின் வீடு

வேதபுரம்: ‘சம்பா’ கோவில்

வேதபுரம்: ‘ரெட்டியார்’பாளையத்தில் ‘முதலியார்’ கட்டிய ‘கிறித்தவ’ ஆலயம்

வேதபுரம்: மியூசியம்

வேதபுரம்: கமலாசனத்துக் கற்பகமே!

—————————————————–
Advertisements
 

One response to “வேதபுரம்: தொகுப்பு

  1. சட்டநாதன்

    20/09/2012 at 7:03 பிப

    ” உத்வேகம் மனதில் எழுந்தது, தேர்வு முடிவு வந்ததும் நொந்து போய் அடுத்த தேர்வுக்கு இப்போதே படிப்பதற்கான திட்டங்களை தீவீரமாகத் தொடங்குவோம் இல்லையா? அது போலத்தான் இந்த எண்ணம் என்பது நன்றாகவே தெரிந்தது ” –

    — உண்மை ..உண்மை …நானும் மகாநகரம் என்ற தலைப்பில் மும்பை மாநகர் பற்றிய என்னுடைய குறிப்புகளை எழுத நினைத்தேன் ..நினைப்பு மிகவும் சுகமாக இருந்ததால் எழுதுவது இயலாததாகிவிட்டது .

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: