RSS

வந்தோம் கேரளா!(GO..வா..4)

16 ஜூன்

GO…வா… கோவா! -4

மட்கான் ரயில் நிலையத்திலிருந்து இரவு பதினொரு மணிக்குக் கிளம்பிய நாங்கள், அடுத்த நாள் காலை எர்ணாக்குளம் வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து வல்லார்படம் அவர் லேடி ஆப் மேன்சம் சர்ச் சென்றோம். கடல் நீரில் தொலைந்த குழந்தை, மூன்று நாட்களுக்குப் பின் இங்குள்ள அன்னையின் அருளால் கிடைத்ததாகக் கூறினார்கள்.

இந்த நம்பிக்கைதான் சமயவேறுபாடின்றி அங்கு அதிகமானோர் வரக் காரணமாய் இருக்கிறது. இதைக் காட்டும் விதமாக சுரூபம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும், ஆலய முன்புற முற்றத்தில் ஒருபுறம் ஸ்டேண்டில் நிறைய விலக்குமார் வைத்திருந்தார்கள். அங்கு வரும் பக்தர்கள் அதிலொன்றை எடுத்து அவ்வளாகத்தை சுத்தம் செய்கிறார்கள். அவ்வாறு செய்வதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறுமென்ற நம்பிக்கை. இது நமக்குப் புதிதாய் இருந்தது. ஆலயத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமையும், கடல் நீரும் சூழ்ந்து நின்று, நமக்குக் காட்சி விருந்து அளிக்கின்றன.அழகாய் சிரிக்கும் அழகை ஆலயத்தின் கோபுர உச்சியிலிருந்து பார்க்க வியூபாயிண்ட் அமைத்திருக்கிறார்கள். அதற்கு ரூ.10/- கட்டணம் செலுத்தி லிப்ட்டில் சென்றும் போய்ப் பார்க்கலாம். ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகளை சித்தரித்து வைத்திருக்கும் மரம் போன்ற அமைப்பு, அங்கு வரும் யாவரையும் கவர்கிறது.மதிய உணவிற்குப் பின், எர்ணாக்குளத்திலுள்ள படகுத் துறைக்குச் சென்றோம். படகில் ஏறி கடலுக்குள் சென்றபின், அங்கிருந்து ஊரைப் பார்ப்பது, உள்ளே உள்ள குட்டி குட்டித் தீவுகளைப் பார்ப்பது, மிதந்து கொண்டிருக்கும் கப்பல்களைப் பார்ப்பது…… என்று எழுதும் எல்லாவற்றையும் – ஒரு முறை நீங்கள் நேரில் அனுபவித்தால்தான் தெரியும்! அந்த மகிழ்ச்சியின் ஆழம் எவ்வளவென்று!திடீரென்று நல்ல மழை பிடித்துக் கொண்டது. வெளியே வேடிக்கை பார்க்க முடியவில்லை. மழை நம்மை நனைக்கத் தொடங்கியதால், அனைவரும் அப்படகின் அடித்தளத்திற்கு வந்தோம். ஸ்பீக்கரில் ஆடத் தூண்டும் பாடல்கள் ஒலிக்க, அமர்ந்திருந்தவர்கள் ஆடத்தொடங்கினர். பாடலோசையை விஞ்சி அனைவரின் கரவோசை எழும்பியது.உடன் வந்த அருட்தந்தையை அவர்கள் அழைக்க, அவரும் உற்சாகத்துடன் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் நனையவைத்தார்.அன்று இரவு பரணஞானத்தில் தங்க வேண்டும். கிளம்பினோம். போகும் வழியில் இரவு உணவுக்காக திரிபுனித்ரா தூய மரியன்னை ஆலய வளாகத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அவ்விடம் ஊர் நடுவே என்பதால் தரமான சைவ அசைவ ஹோட்டல்கள் இருந்தன. சாப்பிட்டுவிட்டு ஆலயத்திற்கு வந்தோம். அங்குள்ள மாதாவின் முகத்தில் தேன் வடிவதாக அங்கிருந்தவர்கள் கூறியதால், வந்திருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த ஒருவர் மாதா தனக்குக் காட்சியளித்து ஜெபமாலை தந்ததாகக் கூறி, ஒரு ஜெபமாலையைக் காட்ட, விழி பிதுங்க அனைவரும் அதைத் தங்கள் கைகளில் வாங்கிப் பார்த்தனர். ஆசையாக அவரவர் கழுத்தில் அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இரவு 10 மணிக்கு பரணஞானம் சென்றடைந்தோம்.

பயணம் தொடரும்…

Advertisements
 

One response to “வந்தோம் கேரளா!(GO..வா..4)

  1. சட்டநாதன்

    16/06/2012 at 6:20 பிப

    ” அப்போது அங்கு வந்த ஒருவர் மாதா தனக்குக் காட்சியளித்து ஜெபமாலை தந்ததாகக் கூறி, ஒரு ஜெபமாலையைக் காட்ட, விழி பிதுங்க அனைவரும் அதைத் தங்கள் கைகளில் வாங்கிப் பார்த்தனர். ஆசையாக அவரவர் கழுத்தில் அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.”

    – இந்த இடத்தில தான் நம்ம எல்லா மதமும் ஒன்னாகுதுன்னு நெனக்கிறேன் சார்.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: